Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3 வது அலையை தடுக்க…தடுப்பூசி செலுத்தி கொண்டாலே போதும்…. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் நகரப்பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு 100 மையங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. அதனை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்துள்ளது.

புதுச்சேரியில் ஒரு நாள் கூட தடுப்பூசி இல்லை என்ற நிலை வரவில்லை. நோய் அற்ற மாநிலமாக புதுச்சேரி மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் முற்றிலுமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலையை எதிர் கொள்ளும் அளவிற்கு அரசு தயாராக உள்ளது என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா மூன்றாவது அலையை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |