Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3- வது அலை… மக்கள் பயப்பட வேண்டாம்… முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!!!

டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் டெல்லியில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது கொரோனா பாதிப்பு. அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ” டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது.

இதனை கொரோனாவின் மூன்றாவது அலை என்று நாம் அழைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். கொரோனா பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |