Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை…. முழு ஊரடங்கு…. பெரும் அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயமான ஒன்று. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை பொறுத்துதான் பாதிப்பு அமையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எல்லாவற்றையும் திறந்து விடுவது நல்லதல்ல. மூன்றாவது அலை விரைவில் வரலாம். ஊரடங்கு இல்லாத நிலையில் புதிய உருமாறிய வைரஸ்கள் வந்தால், அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பினால் தான் மூன்றாவது அலை நம்பத் தகுந்ததாக அமையும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |