Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது அலை, முழு ஊரடங்கு?…. தமிழக அரசு அதிர்ச்சி….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு எடுக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மக்கள் சரியாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் கொத்துக் கொத்தாக தொற்று பரவி அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |