Categories
உலக செய்திகள்

கொரோனா 4வது அலை…. 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்…. இலங்கை அரசு அறிவிப்பு….!!!!

இலங்கையில் கொரோனா நான்காவது அலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் நாடுதழுவிய அளவில் நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இதன் மூலமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் சங்க பேரவை வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |