நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ன. இந்நிலையில் கொரோனா 4-வது அலை உருவாகிறதா என்பதை நிபுணர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் மரபணு மாதிரிகளை சேகரித்து, அதன் அடுத்தகட்ட அலைகளை கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் மீண்டும் கொரோனா பரவலை தடுக்கவும், பொது சுகாதாரத்தை வலுப்படுத்தவும் மாநிலங்களுக்கு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.