நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால் மட்டும்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பயனாளிகளுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.