Categories
உலக செய்திகள்

கொரோனோ பலி 2,442ஆக உயர்வு : சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஜி ஜின்பிங் இன்று அறிவித்துள்ளார்.

சீனாவி பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் இன்று வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டுமே 97 பேர் பலியாகியுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தொடர்ந்து தென் கொரியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல இத்தாலியிலும் 10 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இதனால் பல நாடுகள் சீனாவுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை சீன அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸ் சீனாவின் மக்களுக்கு மட்டுமல்ல சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுத்தம், பாதிப்பு குறுகிய நாட்களுக்குத்தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே சீனாவில் கடந்த 1949ம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |