கர்நாடகாவில் நாளுக்குநாள் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு இடுகாட்டில், ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்த உடல்களை எரிக்க இடமில்லாமல் தவிக்கும் அவலம் நிலவுகிறது.குறிப்பாக பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில இடுகாடுகளில் வரிசையாக 10 ஆம்புலன்ஸ்களில் உடல்களுடன் நிற்கின்றன. இதன் உச்சக்கட்டமாக பெங்களூருவில் பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட் பகுதி இடுகாடில், திரையருங்களைப்போல கொரோனாவுக்கான இடுகாட்டு கேட்டில் ‘ஹவுஸ்ஃபுல் போர்டு’ என மாட்டியுள்ள காட்சிகளே அங்கு நிகழும் கொரோனா மரணங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.