கொலம்பியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி பிரிவு தலைவரான கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியினர் பொருளாதாரத்தில் மிக அளவிலான மாற்றங்களை கொண்டு வந்த போதிலும் அது வாக்காளர்களை சென்றடையவில்லை. மேலும் அதிகரித்து வரும் வறுமை மனித உரிமை தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
அது தேர்தலில் எதிரொலித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்டோ முறைப்படி நேற்று பதவி ஏற்று கொண்டுள்ளார். போதை பொருள் கடத்தல் காரர்கள் மற்றும் கிளர்ச்சி குழுக்கள் போன்றவை அரசுடன் தீவிர மோதல் போக்கை கொண்டிருக்கின்றன. இதனால் நாடு உருக்குலைந்து போயிருக்கிறது. மேலும் நாட்டில் அமைதியை கொண்டு வருவதற்கும் சமத்துவமின்மையை எதிர்த்து போராடுவேன் எனவும் கஸ்டோ உறுதி அளித்திருக்கிறார். புதிய அதிபரான கஸ்டாவோ பெட்ரோ எம்-19 என்னும் கொரில்லா படையின் முன்னாள் உறுப்பினராவார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதை பொருட்கள் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது. உலக நாடுகளில் அதிக அளவு கோக்கைன் போதை பொருள் உற்பத்தி செய்கின்ற நாடுகளின் பட்டியலில் கொலம்பியாவும் ஒன்று. வருடத்திற்கு 910 டன் கோக்கைன் உற்பத்தி செய்கின்றது. இதன் பின் அவை வேறு நாடுகளுக்கும் கடத்திக் கொண்டு செல்லப்படுகிறது.