கொலம்பியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா, தற்போது 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 8-வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் கொலம்பியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. கொலம்பியாவில் ஒரேநாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் 360-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.25 லட்சத்தை எட்டியுள்ளது.