Categories
உலக செய்திகள்

“கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல்”… முதன்முறையாக இடதுசாரிகள் ஆட்சி…!!!!!!

கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த குஸ்டோவோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தநிலையில் அங்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த குஸ்டோவோ பெட்ரோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டோவோ வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ரோடொல்போ ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

மேலும் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட குஸ்டோவோ அந்த நாட்டின் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் குழுவில் இணைந்து செயல்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பின் குஸ்டோவோ மக்களிடையே உரையாற்றியுள்ளார். அப்போது கொலம்பியாவின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிபர் மாளிகையில் வரவேற்கப்படுகிறார்கள். அதிலும் புதிதாக அமையவிருக்கும் அரசாங்கத்தில் அரசியல் துன்புறுத்தலும் சட்ட ரீதியான துன்புறுத்தல் இருக்காது எனவும் மரியாதையும் உரையாடல் மட்டுமே இருக்கும்.

மேலும் ஆயுதம் ஏந்தியவர்களையும், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் போன்றோரின் கருத்துக்களை கேட்பேன் என அவர் கூறியுள்ளார். சிலி, பெரு மற்றும் ஹோண்டுராஸ்  போன்ற போன்ற நாடுகளில் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தல்களில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |