கொலம்பியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் கொலம்பியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 இலட்சத்தை எட்டியுள்ளது.
அந்நாட்டில் ஒரே நாளில் 8,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் 270 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,888 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 4.98 லட்சம் பேர் குணமடைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.