கொலம்பியா நாட்டிலுள்ள காசநாரி மாகாணத்தில் மனிதர்களால் கடத்திச் செல்லப்பட்ட 163 விலங்கினங்களை மீட்டு, அதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் உப்புநீர் ஏரி மற்றும் வனப்பகுதிகளுக்குள் கொண்டுவிட்டனர். எறும்புத் திண்ணிகள், ஆமைகள், மக்காவ் கிளிகள், டக்கன் எனப்படும் பழந்தின்னி பறவைகள், சிறுத்தை உள்ளிட்ட இனங்களும் அவற்றில் அடங்கும்.
இதற்கிடையில் கால்நடை மருத்துவர்கள் மூலமாக அவற்றிற்கு சிகிச்சை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் அதை அவற்றின் வாழ்விடத்திற்கு கொண்டு சென்று கார்ப்போரினோகியூபா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் விடுவித்தனர். அவர்கள் கடந்த வருடத்தில் மட்டும் மனிதர்களால் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்பட்ட 1,200 விலங்குகளை வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.