Categories
அரசியல்

கொலுவில் எந்த வரிசையில் எதை வைக்க வேண்டும்….? இதை கட்டாயம் தெரிஞ்சி வச்சுக்கோங்க….!!!

நவராத்திரிக்கு பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். ஒருசிலர் கொலு வைப்பதை தங்களுடைய பாரம்பரியமாகவே வைத்து வருவார்கள். இப்படி பாரம்பரியமாக வைத்து வருபவர்களுக்கு கொலு எப்படி வைக்க வேண்டும் எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக வைப்பவர்களுக்கு எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரியாது. அதனை தெரிந்து வைப்பது அவசியம். அப்படி வைப்பதனால் முழுமையான பலன்கள் கிடைக்கும். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நம்முடைய கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக அனைத்து வீடுகளிலுமே கொலு வைக்கப்படுவது வழக்கம். இந்த கொலு வைக்கும் பொழுது முதலில் மூன்று படிகள், ஐந்து படிகள், ஏழு படிகள், ஒன்பது படிகள் என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் 11 படிகள் வைக்க வேண்டும். பூமியில் உயிரினங்கள் படிப்படியாக தோன்றியதும் அதில் மனிதனின் வாழ்க்கை எப்படி படிப்படியாக உயர்ந்ததை என்றும் மனிதன் வாழ்க்கையில் மேன்மை அடைய எப்படி படிப்படியாக தான் கடந்து முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த கொலு அமைக்கப்படுகிறது.

ஒவ்வொன்றிலும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு உயிரினங்கள் வரை வரிசையாக அடுக்க வேண்டும். முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள், இரண்டாம் படியில் ஈரறிவு உயிரினங்கள், மூன்றாம் படியில் மூன்றறிவு உயிரினங்கள், நான்காம் படியில் 4 அறிவு உயிரினங்கள், ஐந்தாம் படியில் ஐந்தறிவு உயிரினங்கள், ஆறாம் படியில் ஆறறிவு உயிரினங்கள் வைக்க வேண்டும். ஏழாம் படியில் மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படியில் பகவானின் அவதாரங்களை வைக்க வேண்டும். ஒன்பதாம் படையில் முப்பெரும் தேவர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளையும் பூரண கலச கும்பத்தினையும் வைக்கலாம். ஒரு சிலர் பூரண கலசத்தை கீழே வைத்து விடுவார்கள். சிலர் மேலே வைப்பார்கள். இப்படி வரிசையாக ஒவ்வொரு நிலையாக பொம்மைகளை அடுக்கி வைப்பதே கொலு எனப்படுகிறது.

Categories

Tech |