ஒலிப்பெருக்கி நிலைய உரிமையாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் வடக்குப்பட்டி கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுப நிகழ்ச்சிக்கு ஒலிப்பெருக்கி கட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அரசுக்கும், அவரது இளைய மகனான துரைபாண்டியன், உறவினர் ராஜதுரை ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் அரசுவை தாக்கியுள்ளனர்.
மறுநாள் காலை அரசு தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசுவின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.