Categories
அரசியல் மாநில செய்திகள்

கொலை செய்தவர்கள்…. கொள்ளை அடித்தவர்கள்…. மிரட்டியவர்கள்…. பாஜகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவகாரத்தில் பாஜக ஊடக சுதந்திரத்தை நசுக்குகின்றது என்று சொல்லுறாங்க. சொல்றது யாரு அப்படினா ? யார் அடுத்த வாரிசு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டதற்காக மூன்று உயிர்களை தீ வைத்து கொளுத்திய கட்சி. ஊடக சுதந்திரம் பத்தி பேசுறாங்க. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உள்ளே புகுந்து தீயிட்டு கொளுத்தி மூன்று பெயரை சாகடித்தவர்கள் ஊடக சுதந்திரத்தை பற்றி பேசலாமா ?

நாங்கள் மிரட்டுகிறோம் என்று சொல்லலாமா ? தீ வைத்துக் கொளுத்தியவர்கள் மிரட்டினார்களா ? அதேபோல புதிய தலைமுறை அலுவகத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உங்கள் மீது வருமான வரி சோதனை நடைபெறும் என்று சொன்னாவர் திரு வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்தவர்கள். முதலில் சொன்னது தீயிட்டு கொளுத்தினது தினகரன் என்பது தெரியும், திமுக என்பது தெரியும்.

அதே போல ஜெயா டிவி நிருபரை மிகமோசமாக தரம் தாழ்ந்து பேசியது ஈவிகேஎஸ் இளங்கோவன்.  ஆர். வரதராஜன் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று சொன்ன ஒரே காரணத்திற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு உள்ளே புகுந்து சூறையாடியது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

ஒன்றும் தெரியாத குழந்தைகளை தூண்டிவிட்டு நாட்டினுடைய பிரதமர் மீதும் நாட்டின் மிக முக்கியமான அரசினுடைய கொள்கையின் மீதும் தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துகிறார்கள் என்று சொல்லி அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னால் அது எப்படி மிரட்டல் ஆகும். கொலை செய்தவர்களும், கொள்ளை அடித்தவர்களும், மிரட்டியவர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு வகுப்பு எடுப்பது சரி கிடையாது என்று நான் சொல்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |