கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதுடைய சக்திதாசன் என்ற மகன் இருக்கிறார். இவர் செய்யாறு பகுதியில் இருக்கும் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தப் பேருந்தில் அபினேஷ், யுவராஜ் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த சக்திதாசனை பேருந்தை விட்டு கீழே இறங்க சொல்லியுள்ளனர். அதன்பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து சக்திதாசனை கடுமையான வார்த்தைகளால் திட்டி பலமாக தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சக்திதாசன் மோரணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபினேஷ் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.