Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட அஜித்…. “கலெக்டர் உத்தரவு”… 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்துள்ளனர். இதில் கைதான 20 வயதுடைய அஜித், 24 வயதுடைய மணிகிருஷ்ணன், 27 வயதுடைய முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |