Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தலைவர்…. அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்….!!!!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் இருந்து வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்ட நிலையில், மீண்டும் தலை தூக்க தொடங்கினர். இப்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அல்கொய்தா தலைவரான ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அல்கொய்தா தலைவர் அய்மன் அல்ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனிடையில் நீதி வழங்கப்பட்டு உள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்து இருந்தாலும் எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்” என ஜோபைடன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி, அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு சென்ற 2011-ம் வருடத்திலிருந்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |