Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட சகோதரி…. ரத்த வெள்ளத்தில் தாய்…. அழுதுகொண்டே ஓடிவந்த சிறுவன்…. அதிர வைத்த சம்பவம்…!!

மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன்  தலைநகரான  லண்டன் mitchim-ல் உள்ள வீடு ஒன்றில் நேற்று 5 வயது சிறுமி ஒருவர் கத்தி குத்துப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தாயார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் மரணம் அடைந்த சிறுமி sayagi sivanantham என்றும் சிகிச்சையில் இருக்கும் சிறுமியின் தாயாரின் பெயர் sutha karunanantham(35) என்றும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில் சிறுமி கொலைசெய்ப்பட்ட குடியிருப்பில் இருந்து சிறுவன் ஒருவன் அழுதுகொண்டே வந்ததாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து என்.ஹெச்.எஸ் மருத்துவ உதவியாளரான Elsa கூறுகையில்,”உதவி செய்ய சென்ற போது அங்கே சிறுமியின் உடல் போர்வை போத்தப்பட்டு இருந்தது அதன் அருகே  அவளது தாய் சுதா இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்,சிறுமியை கவனித்த போது தொண்டையில் ஆழமான காயங்கள் இருந்தது”என கூறியுள்ளார்.

காவல்துறையினர்  விசாரிக்கையில் வீட்டின் அருகே வசிக்கும் Riza Marfilla, சிறுமி தூங்குவதாகவே நான் நினைத்தேன் அவளிடம் இருந்து சற்று தொலைவில் 12 அங்குல கத்தியை கண்டதோடு சிறுமியின் அருகே இருந்த இரத்தத்தை பார்த்ததால் அச்சத்தில் நடுங்கிபோனேன்” என கூறியுள்ளார்.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவருக்கு பாதுகாப்பாக காவலர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சிகிச்சை எடுத்து வரும் பெண் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளதும் தெரியவந்துள்ளது இதனடிப்படையில் அழுதுகொண்டே வந்த சிறுவன் அவரது மகன் என்பது உறுதியாகியுள்ளது.

 

Categories

Tech |