Categories
அரசியல்

கொலை மிரட்டல் விடுறாங்க….! “செல்போன் டவரில் ஏறி”…. சுயேச்சை வேட்பாளர் செய்த காரியத்தால் பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம், சாயல்குடி சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி நேற்று டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ள நிலையில் முதல் வார்டில் சரவணமூர்த்தி உட்பட 4 பேர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விட்டதால் அவர் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாயல்குடி காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சுயேட்சை வேட்பாளர் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |