முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு சாலை தகராறில் இவர் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 33 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
Categories