ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கொல்கத்தாவிற்கு சென்று ஐபிஎல் போட்டியை கண்டுகளித்துள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகளான இயக்குனர் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதையடுத்து இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கொல்கத்தாவுக்கு சென்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை சந்தித்து பேசியுள்ளார்.
https://www.instagram.com/aishwaryarajini/?utm_source=ig_embed&ig_rid=75cdf0e7-808a-4005-99f8-35e1b48d372c
ஐஸ்வர்யா தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் திடீர்னு பார்த்தா தனுஷ்தான் வந்துவிட்டார் என எண்ணினோம். மூத்த மகன் யாத்ரா தனுஷ் போலவே இருக்கின்றார். சில ரசிகர்களோ யாத்ரா ரஜினி போல இருப்பதாக கூறியுள்ளனர். இளைய மகன் லிங்கா தான் தனுஷ் போல இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.