கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் நாளை மாலை கொல்கத்தாவில் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் மொத்தமாக 332 வீரர்கள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்களும், 146 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்று உள்ளனர்.
இதில் ஆஸ்திரேலியாவே சேர்ந்த மேக்ஸ்வெல், கிறிஸ் லின், மிச்சேல் மார்ஷ், கம்மின்ஸ் மற்றும் ஹாசில்வுட் போன்ற வீரர்கள் 2 கோடி ரூபாயே அடிப்படையாக கொண்டுள்ளனர். மேலும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெய்ன் மற்றும் இலங்கையின் மேத்யூஸும் 2 கோடி ரூபாயே அடிப்படையாக கொண்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் ஆஸ்திரேலியாவே சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போவாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.