2020 ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி டிசம். 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக, வருகின்ற டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2020-க்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என பிசிசிஐ தரப்பிலிலிருந்து கூறப்பட்டது. ஆனால் 2020 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி 19-ஆம் தேதியே நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தினர்கள் இன்று கொல்கத்தா செல்கின்றனர். மற்ற அணி நிர்வாகிகளும் அடுத்தடுத்த நாட்களில் செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 73 இந்திய வீரர்கள் உள்பட 29 வெளிநாட்டு வீரர்களுக்கும் ஏலம் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.