கொல்கத்தாவில் தசரா பண்டிகைக்காக செய்யப்பட்டுள்ள பந்தல் அலங்காரம் துபாயின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் தசரா பண்டிகை தொடங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா போன்ற அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
மேலும் இந்த உயரமான பந்தல் அமைப்பு விமான போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சில புகார்கள் எழுந்து வந்த நிலையில் அவ்வாறு எதுவும் அளிக்கப்படவில்லை. என மாநில அமைச்சரும் ஸ்ரீ பூமி ஸ்போர்திங் கிளப்பின் தலைவருமான சுஜித் போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் மக்கள் அதிக அளவில் கூடியதால் பந்தலில் உள்ள விலக்குகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.