Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்… பங்குனி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரியாகுறிச்சி குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் வெட்டுடையார் காளி அம்மனுக்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்துள்ளனர். கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்பட்டது.

இதில் அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜன், இணை ஆணையர் தனபால் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் காலை, மாலை என இருவேளையும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி வருகின்ற 31-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Categories

Tech |