நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஆடி முதல் தேதி மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் இந்த ஆற்றில் நீராடி அருள்மிகு அறப்பளீஸ்வரர் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு தளர்வால் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கொல்லிமலை சென்று வரலாம் என்று அரசு அனுமதி அளித்திருந்த போதும், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொல்லிமலை அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு பார்வையிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.