தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதனால் அணைகள், ஏறி, ஆறுகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் நீர்வரத்து அதிகரித்து காட்றாற்று வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
அதனால் கடந்த பத்தாம் தேதி முதல் நம் அருவி, மாசிலா அருவிக்கும் புளியஞ்சோலை பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்றுவரை இந்த தடையானது தொடர் கனமழையின் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மலை குறைந்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியுள்ளார். மேலும் இந்த செய்தி நாமக்கல் மாவட்டம் மக்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்ட மக்களின் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.