Categories
சினிமா

கொல மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்…. “விஜயின் மாஸ்டர் வசூலை மிஞ்சுமா அஜித்தின் வலிமை”….!!!

இன்று வெளியாகியுள்ள அஜித்தின் வலிமை படத்தின் வசூல் மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெறும் மூன்று நாட்களில் 100 கோடியை வசூலித்தது விஜயின்  மாஸ்டர் படம். இதேபோல தமிழகத்தில் மட்டும் அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் வசூல், மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா? என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீசாகி உள்ளது. இதில் வரும் பைக் காட்சிகள் உலகத்தரத்திலான ஆக்ஷன் காட்சிகள் ஆகியவற்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

மூன்று வருட ரசிகர்களின் காத்திருத்தலுக்கு மிகவும் ஒரு ஒர்த்தான படம் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் ‘கொல மாஸ் என்ட்ரி முதல் கிளைமாக்ஸ் வரை’ அஜித், ரசிகர்களை மிரள வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு வலிமை படத்தின் பைக் ரேஸ்கள் ,ஆக் ஷன் காட்சிகள் உள்ளதாக இதுவரை படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இருந்தாலும் வழக்கம் போல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இதை வைத்து சோஷியல் மீடியாவில் மோதிக்கொள்கிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியானது. அதுவும் கொரோனா பாதிப்பின் காரணமாக 50% பார்வையாளர்களுடன் மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் வெளியான, முதல் நாளிலே 34.80 கோடிகளை வசூல் செய்தது. அதேசமயம் வலிமை படம் கொரோனா பாதிப்பால் தள்ளிப்போய் இருந்தாலும், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இன்று வெளியாகியுள்ளது.

வலிமை படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஹவுஸ்புல் என்ற போர்டுடன் பெரும்பாலான திரையரங்குகளில் வலிமை படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் படம் வெளியான முதல் நாளிலே அனைத்து ஷோக்களுக்குமான டிக்கெட்டுகளும் பல தியேட்டர்களில் விற்று  தீர்ந்து போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உலகம் முழுவதும் மூன்று நாட்களில் மாஸ்டர் படம் வசூலித்த 100கோடி தொகையை வலிமை படம் தமிழகத்தில் மட்டும் அதுவும் முதல் நாள் முதல் ஷோவிலே வசூலாகும் என பலர் கூறி வருகின்றனர். இதற்கு நூறு சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும்  ஒரு காரணமாகும் என கூறி வருகின்றனர்.

Categories

Tech |