தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் பரப்புரை பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், கொளத்தூர் என்றாலே தனி உற்சாகம். மக்களின் எண்ணமும் திண்ணமும் உதயசூரியன் சின்னம் தான் எனத் திரண்டு பேரன்பொழுக ஆதரவளித்தனர் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வஞ்சகர்களுக்கும், அவர்களுக்கு குற்றவேல் புரியும் உரிமையாளர்களுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.