கோடை வெயிலின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்துள்ளனர்.
இவர்கள் அருவியில் குளித்தும், படகு சவாரியும் செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையால் வியாபாரமும் களைகட்டியது. இதைத்தொடர்ந்து மரத்தூர் தொட்டி பாலத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள பாலத்தின் மீது நடந்து சென்று இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். மேலும் பாலத்திற்கு கீழே ஓடும் பரளியாற்றிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.