Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்யாத நெல் மூட்டைகள்… ஆத்திரமடைந்த எம்எல்ஏ… பெட்ரோல் கேனுடன் சென்ற காட்சி…!!?

திருத்துறைப்பூண்டியில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதி எம்எல்ஏ பெட்ரோல் கேனுடன் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டி தொகுதியில் ஆடலரசன் என்பவர் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.அவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள தாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமம். அங்கு அவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கு விரைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே இருக்கின்ற நெடும்பலம் நேரடி நெல் முதல் கொள் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் கொண்டு சென்ற நிலையில் அதிக ஈரப்பதம் இருப்பதால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் பணியாளர்கள் இழுத்தடித்துள்ளனர். தினமும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து சென்ற ஆடலரசன் மிகுந்த மனமுடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது உதவியாளர் ஆசைத்தம்பி மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் இணைந்து நேற்று நெருக் கொள்முதல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவர் தன் கையில் பெட்ரோல் கேனை எடுத்து வந்துள்ளார். அங்கு பணியாற்றும் வேலையாட்களை பார்த்து எனது நெல்லை ஏன் கொள்முதல் செய்ய மறுக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதன்பிறகு தனது நிலை உடனடியாக கொள்முதல் செய்து தரவில்லை என்றால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தன்னையும் தனது நெல் மூட்டைகளையும் எரித்து விடுவதாக கூறியுள்ளார்.

இதுபற்றி அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி,சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து எம்எல்ஏ விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரின் நெல்லை விரைவில் கொள்முதல் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பிறகு எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு பணியாளர்கள் 40 லட்சம் கேட்பதாகவும், கூடுதலாக பணம் தரும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்வதாகவும், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |