Categories
மாவட்ட செய்திகள்

“கொள்ளிடம் அருகே ரயில் பாதையில் சிதறிக் கிடக்கும் கற்கள்”…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!!

கொள்ளிடம் அருகே ரயில்வே கேட் பாதையில் கற்கள் சிதறிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டு வருகின்றார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து மங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைந்திருக்கின்றது. மேலும் ரயில் நிலையமும் இருக்கின்றது.

இந்த நிலையில் ரயில்வே கேட் பகுதியில் கற்கள் பெயர்ந்து இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக மருத்துவமனைக்கும் பழையாறு மீன்பிடி துறைமுகத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றது. இந்நிலையில் ரயில்வே கேட் பகுதியில் கற்கள் சிதறிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள். ஆகையால் ரயில்வே கேட் பாதையை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |