Categories
தேசிய செய்திகள்

கொள்ளையடிக்க சென்றபோது….கலகலப்பு பட பாணியில் வசமாக சிக்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!

ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்  ஜாடுபுடியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதனை அறிந்து நேற்று இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலின் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் சென்றிருக்கிறார். அதன்பின் கருவறையில் இருந்த அம்மன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே வர முயற்சி செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் போராடியும் வெளியே வர முடியாததால் கலைப்பு  ஏற்பட்டு அப்படியே தூங்கி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜன்னலில் சிக்கியிருந்த கொள்ளையனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல்  அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை மீட்டனர். மேலும் தற்போது அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |