Categories
உலக செய்திகள்

வீட்டில் கொள்ளையடிக்க சென்ற திருடர்கள்… வெளியே வந்தவுடன்… காத்திருந்த அதிர்ச்சி…!!

திருடர்கள் இருவர் கொள்ளையடித்தவுடன் எளிதாக காவல்துயினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரிட்டனிலுள்ள Stoke on Trent என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு 42 மற்றும் 49 வயதுடைய  இரண்டு திருடர்கள் நேற்றுமாலையில்  திருடச் சென்றுள்ளனர். அங்கு திருடிவிட்டு வெளியே வந்த திருடர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். என்ன காரணம் என்றால் அந்த வீட்டின் வெளியே காவல்துறையினர் வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து காத்துகொண்டிருந்துள்ளனர். அதாவது இந்த கொள்ளையர்கள் பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்துள்ளனர். அதில் ஒருவர் கீழே அமரும் போது தவறுதலாக 999 என்ற காவல்துறையினரின் அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு சென்றுவிட்டது.

இதனால் திருடர்கள் பேசுவது அனைத்தையும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அமைதியாக அங்கு வந்த காவல்துறையினர் கொள்ளையர்களை எளிதாகப் பிடித்து கைது செய்துவிட்டனர். இது குறித்து, தலைமை காவல்துறை அதிகாரி டுவிட்டரில் இதுகு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “உலகத்திலேயே துரதிஷ்டம் உள்ள கொள்ளையர்கள் இவர்கள்தான்” இவர்களை நாங்கள் பிடித்துள்ளோம் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |