Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொள்ளையடிக்க திட்டம் போட்ட கொள்ளையர்கள் கைது ….!!

கோபி செட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடிக்க சென்னையிலிருந்து வந்து திட்டம் தீட்டிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பா. வெல்லாபாளையம் பகுதியில் செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்கால் அருகே சிலர் கொள்ளையடிப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் கீழ்பவானி கிளை வாய்க்கால் பகுதியிலிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னையை சேர்ந்த சத்யா, ராமச்சந்திரன், சீதாராமன், சுடலை ராஜன், மணிகண்டன் என தெரியவந்தது. 5 நபர்களையும் கைது செய்த கோபி செட்டிபாளையம் காவல்துறையினர் அவர்களிடமிருந்த பட்டாகத்தி, வீச்சரிவாள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்த இருந்த நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |