மர்ம நபர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் பேருந்து நிலையம் ஒன்றில் மத்திய வேளையில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். கர்ப்பமாக இருந்த அப்பெண் தனது செல்போனில் தனது அம்மாவுடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளை நிற சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து அவரிடமிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் கீழே விழுந்த கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இச்சம்பவம் தொடர்புடைய கொள்ளையனின் உருவம் கணினியின் உதவியுடன் காவல்துறையினர் வரைந்துள்ளனர்.
மேலும் இந்த புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு அவர் 40 வயது மதிக்கத்தக்க வாலிபராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “இது ஒரு சோகமான சம்பவம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனே எங்களுக்கு தெரிவிக்கவும்.” நீங்கள் பொறுப்பான நபராக இருந்தால் இதை செய்ய முன்வாருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.