தமிழகத்தில் கொள்ளைக்கு எதிரான என் போருக்கான வாழ்த்துக்களை இன்று பெற்றேன் என கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து அவர் பிரசாரத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நேரில் சந்தித்து வருகிறார். “அன்னசாகரம் சிவகாமி அம்மாள், நேதாஜியின் இந்திய தேசிய படையில் சேர்ந்து வெள்ளையருக்கு எதிராகப் போராடினார். கொள்ளையழகு எதிரான என் போருக்கான வாழ்த்துக்களை என்று அவரிடம் பெற்றுக் கொண்டேன்” என்ற கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.