Categories
அரசியல்

“கொள்ளை வெறி” உயிர் காக்கும் விஷயத்தில் ஊழலா….? முதல்வர் மீது உதயநிதி காட்டம்….!!

உயிர் காக்கும் விஷயத்தில் ஊழல் செய்வது மிகப்பெரிய துரோகம் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், முககவசம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் முகக்கவசம் இலவசமாக வழங்கப் படவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி இலவசமாக முகக்கவசம் வழங்கியதில் பல கோடி முறைகேடு என்ற செய்தியை பகிர்ந்து,

இல்லாத நிறுவனத்தை உருவாக்கி டெண்டர் விட்டதால், ரேஷன் கடைக்கு முகக்கவசம் வரவில்லை. முகக்கவசம் வழங்கினாலும் பேப்பர் போல தரமற்று உள்ளதாக செய்தி வருகிறது. எதைத் தொடங்கினாலும், ஊழலில் கொண்டு போய் நிறுத்தும் அடிமைகளின் கொள்ளை வெறி உயிர்காக்கும் முகக்கவசத்திலும் தொடருவது துரோகம் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |