Categories
தேசிய செய்திகள்

கொழாய தொறந்தா பணமா கொட்டணும்…. பிரமிக்க வைத்த அரசு ஊழியரின் ஐடியா …!!

கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த வகையில் பொதுப்பணித்துறை ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் வீட்டில் சோதனை செய்த போது பல இடங்களில் தேடியும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவரது வீட்டில் வித்தியாசமாக இருந்த பைப் லைன் ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்து 40 லட்சம் கட்டுக்கட்டாக ரொக்க பணம் மற்றும் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |