வீட்டில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் ஜீவா நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் தாய்- தந்தை இருவரும் இறந்துவிட்டனர். இதனால் சித்தி வீட்டிற்கு அருகில் இருக்கும் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சங்கர் வீட்டின் கூரை தீப்பற்றி எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து விட்டனர்.ஆனால் இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் கருகிய நிலையில் சங்கர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாணிக்கோட்டகம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்மேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவல்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சங்கரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கர் தீக்குளித்து செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.