தைல மரக்காட்டில் நேற்று திடீரென தீப்பற்றியுள்ளது .
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக தைல மரக்காடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென தைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காட்டின் ஒரு பகுதி முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.