Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த பஞ்சுகள்…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. பல லட்ச ரூபாய் நாசம்…!!

பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.

சேலம் மாவட்டத்திலுள்ள சின்னதிருப்பதி அய்யனார் கோவில் காடு பகுதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பஞ்சு மூட்டைகளை வாங்கி மெத்தை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எந்திரத்தின் உராய்வு காரணமாக திடீரென பஞ்சுகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், எந்திரங்கள் போன்றவை எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |