மூங்கில் காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழத்திருப்பூந்துருத்தி குடமுருட்டி ஆற்றுப்படுகை பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் கொண்ட மூங்கில் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காட்டுக்குள் பரவிய தீயை அணைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீ பற்றியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.