Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தங்காயூர் கிராமத்தில் குப்பமுத்து-மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள்  வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் குப்பமுத்துவின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து குப்பமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |