Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த செல்போன் கோபுரம்…. அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை இருக்கிறது. நேற்று மாலை ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்போன் கோபுரத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் ஜெனரேட்டர் அறை முழுவதும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |