காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புறம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தால் தீயை அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது.
இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.