பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டதால் 2000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக இறந்தன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் 2000 கோழி குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 10 மூட்டை தீவனம், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.